இந்திய சுதந்திர வேள்வியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மஹரிஷி வ.வெ.சு. ஐயர் இந்நூலின் மூல ஆசிரியர். மகாகவி பாரதி இவரது கெழுதகை நண்பர். புதுச்சேரி வாசத்தில் இவருடன் வாழ்ந்தவர்.
’திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் ஆணையை ஐயர் கம்பனின் இராமாயணத்தை ஆய்வு செய்து இந்நூலின் மூலம் நிறைவேற்றியுள்ளார். வெளிநாட்டவர் மட்டுமல்லாது நம் நாட்டாரும், குறிப்பாக தமிழரும், கம்பனின் இறவாத படைப்பாகிய இராமாயணம் உலக காவியங்களில் தலைசிறந்தது என்று அறியுமாறு ஐயர் இந்நூலை யாத்துள்ளார்.
காவியத்தின் இலக்கணத்தை விளக்குவதோடு உலக காவியங்களோடும், குறிப்பாக கம்பராமாயணத்தின் மூலநூலாகிய வால்மீகி இராமாயத்தோடும் ஒப்பிட்டுக் காட்டி கம்பராமாயணம் இவை அனைத்தினும் உயர்ந்தது என்பதை ஐயர் குறுநாட்டுப்பற்றாகக் கூறாது தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.
அவர் மறைந்து பல்லாண்டுகள் கழித்தே வெளிவந்த இந்நூல் ஆங்கிலத்தில் அமைந்ததால் தமிழரிடையே இன்னும்கூடச் சரியாக அறியப்படவில்லை. அக்குறையை நீக்கும் முயற்சியே இம் மொழிபெயர்ப்பு நூலாகும்.
மொழிபெயர்ப்புத்துறையில் தலைசிறந்து விளங்கிய சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரனின் நெடுநாள் வேணவாவை இம் மொழிபெயர்ப்பு நூல் நிறைவேற்றுகின்றது.
Be the first to rate this book.