இராமாயணம் என்பது பரம்பொருளாகிய ஸ்ரீமந் நாராயணன் தசரத சக்கரவர்த்தியின் புதல்வனாகத் திரு அவதாரம் செய்து, இராமன் என்னும் திருப்பெயரோடு விளங்கி நன்மையை காத்து, தீமையை அழித்ததின் திருக்காவியமாகும். இதனைத் தமிழில் இனிமையோடு வழங்கியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஆவார். இவர் பாடிய இராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்களை உடையது. இதில் நான்காவதாகிய கிட்கிந்தா காண்டம் மூலமும் தெளிவுரையுமாக இப்போது வெளிவருகிறது.
Be the first to rate this book.