சென்னை கம்பன் கழகம், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் அண்மையில் ‘கம்பனில் _ ராமன் எத்தனை ராமன்?’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எட்டு நாட்கள் நிகழ்ந்த இந்தச் சொற்பொழிவுகளில், கம்பன் தன் ராமாயணத்தில் நாயகனான ராமபிரானை எத்தனை முகங்களில் சிறப்புறக் காட்டியிருக்கிறார் என்பதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு சொற்பொழிவாளர்கள் நயத்துடன் முன்வைத்தனர். காலத்தைக் கடந்து வந்த கம்பனின் கருத்துமணிகள், காற்றோடு வெறுமே கரைந்து போய்விடக்கூடாது; எழுத்தில் வடித்தால் அந்த எண்ணத் துளிகள் எண்ணற்ற வாசகர்களுக்குப் போய்ச் சேரும் என்பதால் விகடன் பிரசுரம் இதைத் தொகுத்து நூலாக்க முனைந்தது. இந்நிகழ்வின் பொறுப்பாளர்களான சென்னை கம்பன் கழகம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜம் ஆகியோர் மகிழ்வுடன் அனுமதியளித்தனர். தங்கள் சொற்பொழிவுகளைத் தொகுக்க மனமுவந்து அனுமதியளித்த சொற்பொழிவாளர்களுக்கும் நன்றி. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ‘நாள்தோறும் நல்லது செய்வோம்’ என்று தினமும் ஒரு நிகழ்ச்சியை நடத்த உதவினார்.
Be the first to rate this book.