‘நல்ல வேளையாக மனித வாழ்க்கை அசையாத ஒன்றாக இல்லை. எப்படியோ ஆச்சரியப்படுகிற விதமாக அது நகரத் தெரிந்து வைத்திருக்-கிறது.’ இது ஒரு நதியின் கதையல்ல. மனிதர்களின் கதை. ஒவ்வொரு பாத்திரமும் அவரவர்களுக்கான பிரத்யேக குணங்களுடன் வலம் வருகிறார்கள். அழுகிறார்கள். சிரிக்கிறார்கள். பரவசப்படுகிறார்கள். நெகிழ்கிறார்கள். கோபப்படுகிறார்கள். அந்தக் கணங்களில் நாமும் அந்த உணர்வுகளுக்கு ஆளாகிவிடுகிறோம். அதுதான் வண்ணநிலவனின் எழுத்து பலம். வாழ்வின் போக்கைத் தீர்மானிப்பது யார் கையில் இருக்கிறது? விடை கிடைக்காத பல கேள்விகளை முன் வைப்பதும், அவற்றின் ஊடாக மனித மனங்களை ஊடுருவிச் செல்வதும் படைப்பின் தலையாயக் கடமையாக இருக்கிறது. அந்த வேலையை வெகு சிறப்பாகச் செய்கிறது ‘கம்பாநதி.
நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.
Be the first to rate this book.