தமிழுக்குக் கதியாக விளங்கக் கூடிய நூல்கள் கம்பராமாயணமும் திருக்குறளுமே ஆகும். தமிழ் மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து ஒப்பிலக்கண நூலை இயற்றி அருளிய மேலை நாட்டுப் பெருமகனார் கால்டுவெல் அவர்கள், ''உலகினில் நாகரிகம் முற்ற அழிந்துவிட்டாலும், கம்பராமாயணமும் திருக்குறளுமே இருந்தால் போதும்; மீண்டும் அவற்றைப் புதுப்பித்து விடலாம்'' என்று கூறிக் கம்பராமயணத்துக்கு அரிய பெருமையைச் சேர்த்தார். இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற கவிஞராக விளங்கிய தேசியகவி சுப்பிரமணிய பாரதியாரோ, 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை'' என்று பெருமிதத்தோடு பாடியுள்ளார்.
Be the first to rate this book.