புலன்கள் தகிக்கும் அதீத காமம் உருவாக்கும் தாச மனோபாவம் ஒரு தட்டில், இறைஞ்சும் காதல், பாவனைகளில் வீழ்கையில் நிகழும் சொற்களின் பாசாங்கு மறு தட்டில் ஒருபோதும் சமன் எய்தாத துலாபாரத்தின் மேல் கீழ் அலைவுகளைதான் இங்கே மொழிப்படுத்த விழைந்திருக்கிறார் ரிலுவான். இரவின் ஒலி ரகசியங்களெல்லாம் சாமக்குறி, பகலின் ஒளிச் சகுனங்கள் எல்லாம் காதலின் சங்கேதங்களாக தெரிகின்றன. பித்து நிலை உருவாக்கும் சிதிலமுற்ற மொழி விளையாட்டில் ஒழுங்கும் ஒழுங்கின்மையும் நிரந்தே கிடக்கின்றன.
- நேசமித்ரன்
Be the first to rate this book.