இந்நாவல் தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும், இரண்டாவது புதினமாகவும் நிகழ்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகள், பேச்சுவழக்குகள், சடங்குகள் போன்றவை இதில் அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ள விதம் அக்காலத்தையே நம் கண்முன் விரித்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளது. யதார்த்தமான நடையும், கதைமாந்தர்களின் பண்பு நலன்களும் நேர்த்தியாக பதியப்பட்டுள்ள இந்நாவல் சுவையம்சமும், கலைத் திறனும் நிரம்பப் பெற்று விளங்குகிறது.
தமிழ் இலக்கியத்தில் இந்நாவல் ஒரு மைல் கல் என்பது நிதர்சனம்.
அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த தமிழக கிராமத்தின் வாழ்வைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை நமக்குத் தெரிவிக்கும் தமிழ் வசன நூல் இதைத் தவிர வேறொன்றும் கிடையாதென்றே சொல்லலாம். அது மட்டுமின்றி, ராஜமய்யர் எள்ளி நகையாடி ஏளனம் செய்த எத்தனையோ அம்சங்கள் இன்று கூட ஜீவனுடன் இருந்து வருகின்றன. ஸ்ரீ ராஜமய்யர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார் என்று பாரதி சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. புதிய தமிழ் இலக்கியத்தின் மூன்று தூண்கள் ராஜம் ஐயர், பாரதி, புதுமைப்பித்தன்.
Be the first to rate this book.