ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தியாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்த போது, அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் பற்றி மட்டுமல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன். -கல்கி தேவனின் கதைகளை ஒன்று விடாமல் படித்தவன் நான். அவர் ஒரு தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர். அவர் உரைநடையின் சரளமும் துடுக்கும், தொடர்கதை அத்தியாயங்களில் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருக்கும் அற்புதமும், அவரை விட்டால் தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. என்போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார் தேவன். அவரை இன்று படித்தாலும் புதிதாகவே இருக்கும். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான். -சுஜாதா.
ஒரே நேரத்தில் நகைகளை களவாட மூன்று கூட்டணிகள் முயல்கின்றனர். யார் எதற்காக களவாடுகின்றனர் என்பதை சுவாரசியமாக தேவன் கூறியுள்ளார்.
சி.ஐ.டி சந்துரு முதன் முறையாக ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார். சி.ஐ.டி சந்துரு புத்தகத்தில் கடைப்பிடித்த பாணியை இதிலும் கடைப்பிடித்து இருக்கிறார்.
ஒரே சம்பவம். முன்னும் பின்னுமாக அதே இடத்தில் ஒவ்வொருவரும் என்ன செய்தார்கள் என்று கூறியுள்ளார்.
சுவாரசியமான புத்தகம். தேவன் தேவன்தான்.
Be the first to rate this book.