கல்வி உளவியல் நூலாசிரியர் முனைவர் தீபராணி கல்வியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியிலிருந்தபோது மாணவர்களின் தேவையறிந்து செய்த பல காரியங்களின் விளைவு இந்த நூல். இந்நூலின் உள்ளடக்கங்களில் பலவும் களத்தில் / வகுப்பறைகளில் சோதனை செய்து பார்க்கப்பட்டவை.
குழந்தைப் பருவம் தொடங்கி வளரிளம் பருவம் வரையிலான மாணவர்களின் கற்றல் தொடர்பான உள அறிவியல் கூறுகளை உள்ளடக்கிது கல்வி உளவியல் எனும் இந்நூல்.
இந்நூலில் உளவியல் முறைகள், மனித வளர்ச்சியும் முன்னேற்றமும், அறிதிறன் வளர்ச்சி, சமூகவியல்பு, மனவெழுச்சி மற்றும் ஒழுக்க வளர்ச்சி, கற்றல், பயிற்சி மாற்றம், நினைவு, மறதி, நுண்ணறிவும் ஆக்கத்திறனும், ஊக்கமும் குழுஇயக்கவியலும், ஆளுமையும் அதன் சில கூறுகளும், பொருத்தபாடின்மை, நெறிபிறழ்நடத்தை, மனநலம், வழிகாட்டலும் அறிவுரைப்பகர்தலும் என பத்துத் தலைப்புகளில் கேள்வி-பதில் வடிவிலான முன்வைப்புகள் வகைமைப்படுத்தப்பட்டுள்ளன. கல்வியியலில் இளங்கலை (B.Ed.), முதுகலை (M.Ed.) கற்பவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் கல்வி உளவியல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைப் பாடமாகப் படிப்பவர்களுக்கு மட்டுமின்றி உளவியல் தொடர்பாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் எளிமையாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.
Be the first to rate this book.