கல்வி பற்றியும் அது சார்ந்து முன்னெழும் பிரச்சனைகள் பற்றியும் அதில் வினைபுரியும் அரசியல் பற்றியும் தீர்க்கமான விமர்சனக் குரலோடு பேசும் கட்டுரைகள் இவை.
அமர்தியாசென், கே.என். பணிக்கர் தவிர ஏனையவர்கள் தமிழ்ச் சூழலில் இயங்குபவர்கள். நம் இந்திய மாணவர் சங்கம் 2010ல் வெளியிட்ட கல்வி மலர்தான் இந்தத் தொகுப்பின் அச்சாணி. பாரம்பரிய இந்தியக் கல்வி என இந்துத்வா சொல்வதன் பித்தலாட்டத்தைத் தோலுரிக்கும் த.வி. வெங்கடேஸ்வரனின் கட்டுரையோடு தொடங்கும் தோழர் பாலகிருஷ்ணனின் பயணம், கல்விச் சந்தைகளை உடைக்கும் வசந்திதேவி வழியாக, தோழர் கனகராஜின் வகுப்பறை ஜனநாயகம் கட்டுரையோடு அ. மார்க்ஸின் கல்வி உரிமை சட்டம் என்பதுகூட ஒருவகை மோசடிதான் என அடைந்து இன்றைய கல்வி குறித்த தீர்க்கமான விமர்சனத்தை அரசியல் பூர்வமாகத் தொகுத்துரைத்துள்ளது. கல்வி மணி அவர்களின் நேர்காணல் சிறப்பு.
Be the first to rate this book.