கடந்த மூன்றாண்டுகளில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அணுகல்முறைகளை, இந்த மூன்றாண்டு காலத்திய அவர்களின் பாட நூல்களின் ஊடாகப் புரிந்து கொள்ள சிவகுருநாதனின் இந்நூல் நமக்குப் பெரிய அளவில் உதவும்.
– பேரா. அ.மார்க்ஸ்
சிவகுருநாதனின் ஆழ்ந்த வாசிப்பும், நேசிப்பும், கல்விப் புலத்தின் மீதான ஆழ் கரிசனமும் கல்வி அபத்தங்களை ஆசிரியர்களுக்கான ஓர் கையேடாக மாற்றித் தருகிறது. அபத்தங்களுக்கு அப்பால் சென்று தெளிவான விளக்கங்களை, வழிகாட்டுதலைப் பெற்றுத் தருகிறது.
– இரா.மோகன்ராஜன்
தமிழ்நாடு பாடநூல் – கல்வியியல் கழகத்தால் சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய பாடநூல்களில் உள்ள பிழைகளைப் பட்டியலிட்டுள்ளதுடன் அந்தப் பிழைகளுக்கான திருத்தங்களையும் பரிந்துரைக்கிறது இந்நூல். குறைகளை மட்டும் சொல்லாமல், முந்தைய பாடநூல் வடிவமைப்புக் குழுக்களுடன் ஒப்பிட்டால் புதிய குழு செயல்படுத்தியிருக்கும் வரவேற்புக்குரிய மாற்றங்களையும் பாடநூல்களில் பாராட்டுக்குரிய அம்சங்களையும் இந்த நூல் அடையாளம் காட்டியுள்ளது.
- இந்து தமிழ் திசை (மார்ச் 02, 2021)
தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் கழகம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புதிய பாடநூல்களில் உள்ள பிழைகளைப் பட்டியலிட்டு விவரிப்பதோடு அவற்றுக்கான திருத்தங்களையும் பரிந்துரைக்கும் நூல். எழுத்துப் பிழைகள், மொழிப் பயன்பாடு சார்ந்த பிழைகள், மொழிபெயர்ப்பு சிக்கல்கள், தகவல் பிழைகள், கருத்தியல் கோளாறுகள், ஒரே தகவல் அல்லது பெயர் ஒரே நூலில் வெவ்வேறு விதமாக இடம்பெற்றிருப்பதால் நேரிடும் குழப்பம் என அனைத்து வகையான பிழைகளையும் பட்டியலிடுகிறது. அதே நேரம் முந்தைய பாடநூல்களிலிருந்து புதிய நூல்கள் எந்தெந்த வகைகளில் மேம்பட்டிருக்கின்றன என்பதையும் விவரிக்கிறது.
- இந்து தமிழ் திசை (ஜனவரி 25, 2022)
Be the first to rate this book.