கல்பனா ' என்பதற்கு 'கனவு ' என்று ஒரு அர்த்தம் உண்டு. அதற்கேற்ப சிறு வயதிலிருந்தே கனவு கானத் தொடங்கிய கல்பனா சாவ்லா'' தாம் கனவுகளை எல்லாம் நனவாக்கிக் காட்டினாள். புதுமைப்பெண்'ணுக்கு இலக்கணம் வகுத்துச் சொன்னான் மகாகவி பாரதி. இந்த மாகவியின் கவிதைக்கு இலக்கணமாக வாழ்ந்து முடிந்தவர் கல்பனா சாவ்லா. சின்னஞ்சிறு வயதிலேயே தாம் எந்தத் திசைவழியில் பயணத்தைத் தொடர வேண்டும் என்பதில் தெளிவான முடிவோடு வாழ்க்கையில் நடைபயின்றவர் கல்பனா சாவ்லா ! பெண்களால் இயலாது என்று மற்றவர்கள் எண்ணியதை எல்லாம் இயலும் என்று வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா . நாற்பத்து மூன்று வயதிற்குள் உலக மனித குலம் அனைத்தும் நினைத்து நினைத்து நெஞ்சம் உருகும் எண்ணம் தமது காலடிச் சுவடுகளை அழியா வண்ணம் பதித்துச் சென்றவர் கல்பா சாவ்லா. இது கல்பனா சாவ்லா'' வைப் பற்றி தமிழில் வெளி வருகின்ற முதல் நூல் மட்டுமல்ல; மூல நூலும் இதுதான்
Be the first to rate this book.