எல்லாக் கதைகளிலும் நான் மரணத்தைத்தான் கொண்டாடுகிறேன். ஏனெனில் நான் ஏற்கனவே மரணித்துப் போனதாகவே உணர்கிறேன், பழகிய அக்காவின் மரணம், பழகிய நண்பனின் மரணம், தற்கொலை செய்துகொண்டுவிட்ட அவளின் மரணம் எதுவும் என் நினைவிலிருந்துஅகல மறுக்கிறது. ஒரே முகத்தில்தான் மகிழ்ச்சியும் துக்கமும் வெளிப்படுவதுபோல என் கதைகளிலும் அப்படி இருத்திக்கொள்ளப் பார்க்கிறேன், ஆனாலும் மரண முகமே அவற்றில் அதிகம் வந்து நிற்கிறது. எல்லாவற்றையும் கடவுள்தான் கொடுக்கிறார் என்ற நம்பிக்கொண்டிருக்கும் முட்டாள் அல்ல நான், மகிழ்ச்சியும் துக்கமும் நாம் உருவாக்கிக்கொள்ளக் கூடியவைதான் என்றாலும் சில மனிதர்களே எப்போதும் மகிழ்ச்சியாகவும் சில மனிதர்கள் எப்போதும்துக்கமாகவும் வாழவேண்டிய காரணம் என்னவென்று யோசிக்கவும் வேண்டியிருக்கிறது
- சுரேஷ் மான்யா
Be the first to rate this book.