தஞ்சாவூர் - கள்ளத்தை கலைநயத்துடன் கூடிய உயர் தொழில் நுட்பமாகி உலகத்தரத்திற்கு தந்த கலைகளின் கலைக்களஞ்சியம். இன்று எல்லாம் தூர்ந்து போய் , வறண்டு, புழுதி பறக்க பெருமைகளின் எச்சமாய் இருண்டு போய்ப் பயமளிக்கிறது. தொலைந்து போன பெருமையை வரலாற்றுப் பதிவாக கள்ளம் நாவலில் தந்திருக்கிறார் ப்ரகாஷ் உலகச் சந்தையில் பொருள் மதிப்பு மிக்க வணிகமாய் கலை கள்ள ஒப்பனை புனைவதை எதிர்க்கும் ஓர் உரிய கலைஞனின் அப்பட்டமான வாழ்வை கள்ளம் குடித்து காவியமாக்கி தந்திருக்கிறார் ப்ரகாஷ் கலை பரிமாணம் கொள்ள வேண்டும். விதவிதமாய் வெளிப்பட்டு கலைஞனின் தனித்துவ பிழிவாய் தன் தரத்தை மெய்ப்பிக்க வேண்டும். தேங்கி, முடங்கி, மழுங்கிவிடக் கூடாது. இந்த அற்புதக் கலை ஆயுத்த நகலாகும் ஆபத்தான கள்ளத்திற்கெதிராய் கலக வடிவமெடுத்திருக்கும் இந்த நாவலை, பிரகாஷ் தவிர வேறெந்த கொம்பனாலும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்பதை வாசிக்கிறவர்கள் உணர்ந்து கொள்ளும் அனுபவத்தை தருவதே இந்தக் கள்ளம் நாவலின் உன்னதம்.
Be the first to rate this book.