மில்லுக்குள்ள சாதி இருக்கு அரசியல் இருக்கு அதிகாரத் திமிர் இருக்கு என் முன்னாடியே பொம்பளை புள்ளைகளோட மார கிள்ளிட்டு போற அதிகாரிங்க இருக்கானுங்க என்னை பார்த்ததும் கண்ணீர் விட்டுட்டு நிக்கும்ங்க வீட்ல கஷ்டம்னு வர்ற புள்ளைங்கள இவனுங்க படுத்துற பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. எதுவும் பேச முடியல? கேள்வி கேட்சு முடியல? முதலாளியோட சாதிகாரனும் சொந்தகாரனும்தான் அதிகாரி ஆக முடியும். யூனியன் மூலமா கேள்வி கேட்டா உடனடியா மில்லை மூடச் சொல்றானுங்க அத்தனை வயிறும் காயுது வாங்கி இருக்குற கடனுக்கும் சிக்கிக் கிடக்குற வீட்டு பத்திரத்துக்கும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டி இருக்கு சுமங்கலி திட்டம்னு சொல்லி வயசு புள்ளைகளையா பாத்து சின்னச் சின்ன கிராமங்களில் இருந்து கொண்டு வந்து அடச்சு வச்சிருகானுங்க. எந்த புள்ளைக்கும் விவரம் இல்ல. மாடு மாதிரி உழைக்குதுங்க, நல்ல சாப்பாட்ட மட்டும் போட்டுட்டு அதுகள நேரம் காலம் இல்லாம வதக்கி எடுத்துடறானுங்க.
-நாவலிலிருந்து
Be the first to rate this book.