கலைத்துப் போட்ட கண்ணாடித் துண்டுகள் கலைடாஸ்கோப்பில் கலையாவது போல் வெவ்வேறு உணர்வுகளும் விசித்திர நிகழ்வுகளும் புனைவு வேடந்தரித்து வருகின்றன. சிறுமியின் வியப்பும், குமரியின் பதற்றமும் ஒருசேரக் குவிந்த புனைவுத் தருணங்கள் இவற்றின் கல்யாண குணம் என்றாலும் அவற்றை மீறிக் கொண்டு வெள்ளி முளைத்தது மாதிரி சட்டென மானுடத்தின் இருண்மை எங்கேனும் வெளிப்பட்டு அதிர்ச்சி தருகிறது. மத்யமர் சங்கடங்கள் இவற்றின் சாரமெனக் கூறலாம். பெண்களின் சிக்கல்களைப் பெண்கள் எழுதுவது என்ற வழமையான வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் பொது விஷயங்களைப் பெண் பார்வையில் சொல்ல முனைந்திருப்பது தொகுப்பின் நிமிர்வு. ஒரு புதிய எழுத்தாளினியின் வருகையை அழுத்தமாக அறிவிக்கும் கதைகள் இவை.
5 தமிழ்கூறும் நூலகம்
நுணுக்கமான நுன்னிய உணர்வுகளை அழகான எழுத்துக்கள் மூலம் எளிமையாக புரியவைத்ததற்கு நன்றி
Karthikeyan Palanivel 30-01-2024 10:08 am
5 களிற்றடி
Excellent
Surya 22-01-2024 12:42 am
5 சொகுசு உய்வு கதைகள் மிக அருமை விறுவிறுப்பாகச் செல்லும் கதைகள்.
மிக அருமை. நிச்சயம் வாசிக்கலாம்
Priya 22-01-2024 12:37 am