தமிழ்நாடு எட்டுக்கோடி மக்களால் ஆனது. இன்றைக்கும் ஆயிரக்கணக்கானோர் எங்கெங்கோ போகிறோம் வருகிறோம். சோழமண்டலக் கடற்கரையை ஒட்டியபடி கலிங்கம்வரை செல்லும் ஒரு பயணத்தை யாருமே நிகழ்த்தவில்லையா என்ன ? ஆனால், அத்தகைய பதிவினை, எழுத்தினை எங்குமே காண முடியவில்லை. இன்றைக்கு ஓரிடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆங்கிலப் பத்திகள்தாம் உதவி செய்கின்றன. தமிழில் இத்தகைய முயற்சிகளைத் துணிந்து செய்வோர் யாருமே இல்லை. தேர்ந்த தமிழில் எழுதப்பட்ட ஓரிடத்தின் ஆயிரம் குறிப்புகளைக்கொண்ட அரும்பயண நூல்தான் ‘கலிங்கம் காண்போம்’. இது வெறும் சுற்றுலாக் கதையன்று. ஊர்சுற்றிக் குறிப்பன்று. பயண இலக்கியம்! பயண இலக்கியத்தின் தலையாய தமிழ்நூல்களில் ஒன்றாக இனி வரும் காலத்தில் ‘கலிங்கம் காண்போம்’ என்னும் இந்நூல் திகழும் என்று உறுதியாக நம்புகிறேன்.
Be the first to rate this book.