நமது காலகட்டத்தின் சித்தாந்தங்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற பெரும் விருட்சத்தின் அடிமரத்தில் கோடாலி வைத்தாயிற்று என்றும் சொல்லலாம். சித்தாந்தங்கள் தகர்ந்துபோகும் நிலை அன்மையில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. தனிமனித கருத்துச் சுதந்திரம் எந்த அளவில் பொதுமக்களால், ஆட்சியாளர்களால் இலக்கியவாதிகளால், அரசியல்வாதிகளால் நோக்கப்படுகிறது என்று கவனிக்கிறேன். கருத்துச் சுதந்திரத்தையே தன் ஆயுதமாகக் கொண்ட இலக்கியவாதிகளும்கூட கருத்து சுதந்திரம் பற்றிய சரியான நிலைபாடின்றி, கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறார்கள்.
ஒரு இலக்கியவாதி தன் படைப்பைக் கொண்டுவந்தால் அந்தப் படைப்பைக் கொள்கைரீதியாக விமர்சிக்கலாம். ஆனால் இன்று பேச்சுரிமை,எழுத்துரிமை என்பது நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. அத்தகைய புராதனமான மனங்களுக்குச் சம்மட்டி அடி கொடுத்து சமீப காலங்களில் மாற்றுச் சிந்தனையைக் கொண்டுவர என் எழுத்து துனை நிற்கிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நான் என் சமுகத்தில் அடித்தளத்திலுள்ள மக்களின் ஆன்மாவாக இருக்கிறேன். நாவலில் வரும் ஏதோவொரு கதாபாத்திரதின் பேச்சிலிருக்கும் கருத்தை ஜோ டி குருஸின் கருத்தாக எண்ணிக் கொண்டு விமர்சித்து ஆணியடிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்பிகிறேன், என்னுடைய படைப்புகள் கடற்கரைச் சமூகங்களின் ஆன்மாவாக சாதி, மதம், தாண்டிய அவர்களின் குரலாகவே ஒலிக்கிறது. நான் ஜோ டி குருஸ் என்ற தனிமனிதனல்ல, கடற்கரைச் சமூகங்களின் ஆன்மாவாக இருக்கிறேன் என்பதே என்னை மூச்சுவிட வைத்துக்கொண்டிருக்கிறது.
Be the first to rate this book.