‘கலி புராணம்’ உண்மையாகவே நடந்த நிகழ்ச்சியால் தூண்டப்பட்டதாகும். ஒரு வெள்ளாள குலத்துப் பெண்ணோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் கனகாலமாக களவாக உறவு வைத்திருந்து பின்னர் அவளைக் கொலை செய்த நிகழ்ச்சிதான் இதன் பின்னணி. ஆனால் கதை வழமையான சாதிப் போராட்டக் கதையாக, தாழ்த்தப்பட்ட மக்களை ஊரைவிட்டுத் துரத்தும் ‘பேயோட்டக்’ கதையாகத் தோற்றங்காட்டினும் இது இன்று ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் தாழ்த்தப்பட்ட (தலித்) மக்களுக்கெதிரான மேற்சாதிக்காரரின் அடக்குமுறையை, அக்கிரமங்களை வெளிப்படுத்தி எழுதப்பட்ட எந்தப் படைப்போடும் ஒப்பிடுவது முழுமையாகாது.
Be the first to rate this book.