எளிய மனிதர்களின் வாழ்வில் ஒளிவு மறைவு, சூழலுக்கு ஏற்ப மாறுதல் என்பது எப்போதும் இருக்காது. அவர்கள் அவர்களின் வாழ்க்கை போகும் போக்கிலேயே செல்பவர்கள். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை அதன் போக்கிலேயே ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் அவர்கள்.அப்படிப்பட்ட எளிய, விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலைக் களமாகக் கொண்டது இந்தக் கலவை நாவல். கட்டடம் எழுப்ப தேவைப்படும் இயந்திரங்களில் கலவை இயந்திரமும் ஒன்று. அந்தக் கலவைத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வை, உழைப்பை மையமாகக்கொண்டு செல்கிறது இந்த நாவல்.பூங்கொடி எனும் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் ஏமாற்றம் அவளை என்னவாக ஆக்கியது என்பதை இதன் முடிவில் சொல்லப்பட்டுள்ளது. மாற்றத்தை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்வதுதான் மனித இயல்பு என்பதை அழகாகச் சொல்கிறது இது.இதில் வரும் கட்டடத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையோடு படிக்கும் வாசகனும் அவர்களோடு வாழ்ந்துகொண்டிருக்கும் நிலைக்கு காமுத்துரையின் எழுத்து கொண்டு செல்கிறது.இனி, கலவையான மனிதர்களின் வாழ்வியலைக் காணலாம்!
Be the first to rate this book.