தமிழ் தொலைக்காட்சியின் முடிசூடா மன்னர் கலாநிதி மாறன். கூர்மையான மதிநுட்பம், போட்டியாளர்களை வளரவிடக்கூடாது என்ற வெறி, தேவையான அளவு அரசியல், அதிகாரப் பின்னணி, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வேகம் என அனைத்தும் சேர்ந்து மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியாவின் மீடியா மன்னராக ஆகியுள்ளார் கலாநிதி.
தமிழ்நாட்டு மக்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்கள் என்ற பல்ஸ் தெரிந்த மனிதர். அதே நேரம் மக்கள் எதைப் பார்க்கவேண்டும் என்று இரும்புக்கரத்துடன் தீர்மானிப்பவராகவும் இவர் ஆகிவருகிறார்.
அரசியல் இவருக்கு ஆதாயம் தருகிறதா அல்லது கழுத்தில் தொங்கும் கல்லாக இருக்கப்போகிறதா?
கலாநிதி மாறனின் சாதனைகளைப் பாராட்டுவதோடு, சன் டிவி வளர்ச்சியின்போது நடைபெற்ற சில பிரச்னைகளையும் சுட்டிக்காட்ட இந்தப் புத்தகம் தயங்குவதில்லை.
நூலாசிரியர் கோமல் அன்பரசன், நம்பிக்கை தரும் இளம் பத்திரிகையாளர். தன் இளம் வயதிலேயே ஒரு தனியார் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுக்குத் தலைமை ஏற்றிருக்கிறார். சன் டிவியின் செய்திப் பிரிவில் ஐந்தாண்டுகள் பொறுப்பான பணியில் இருந்தவர். திருப்பூர் தமிழ்ச்சங்க விருதுடன், சிறந்த இளம் எழுத்தாளர், பத்திரிகையாளர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். நவீன நடைமுறை இதழியல் பற்றி தமிழில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் இவருடைய நான்காவது.
Be the first to rate this book.