தற்காலத் தமிழ் விமர்சன உலகில் பேராசிரியர். இரவிகுமாரின் இடம் இன்றியமையாதது. எளிமையாகவும் அதேவேளையில் காத்திரமான கருத்தாக்கங்களை முன்வைப்பதில் அவருக்கு இணை அவரே. அவருக்கு வெகுசன இலக்கியம், தீவிர இலக்கியம், புகழ்பெற்றவர், புகழ்பெறாதவர், என்றெல்லாம் பேதமில்லை. ஆகச் சிறந்த படைப்புகளை எவர் முன்வைக்கிறார்களோ அவர்களையெல்லாம் அவர் தேர்ந்தெடுத்து வாசிப்பதோடு தனது விமர்சனத்தையும் உடனுக்குடன் பதிவு செய்பவர். கல்விப்புலத்தில் இத்தகைய செயல் பாடுகளை முன்னெடுக்கும் பேராசிரியர்கள் சிலரே. அவரது ‘கலையும் போராட்டமும் என்னும் நூல் கவிதைகள், புனைகதை, நாடகம், சித்திரக்கதை என்னும் வகைமைகளில் விமர்சனக் கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கும் நூல். ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் கையில் வைத்திருக்கவேண்டிய ஆவணமாக நூல் அமைந்துள்ளது.
Be the first to rate this book.