பொறியாளரான நூலாசிரியர் ஒரு மருத்துவரின் கோணத்தில் மாநிலத்தின் இதயம் என்பது பொருளாதாரம்தான் என்று இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதயமாக விளங்கும் பொருளாதாரம்தான், வளர்ச்சி என்ற இரத்தத்தை மாநிலம் என்கிற உடல் முழுவதும் சீராகப் பாய்ச்சக்கூடிய வலிமையைக் கொண்டதாகும். தொழில்வளர்ச்சியினால்தான் பொருளாதார வளர்ச்சியைக் காண முடியும். தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி 1969-க்கு முன் எப்படி இருந்தது. தலைவர் கலைஞர் முதலமைச்சரான பிறகு வகுக்கப்பட்ட தொழிற் கொள்கைகளாலும், உருவாக்கிய தொழிற்பேட்டைகளாலும் தமிழ்நாடு பரவலான வளர்ச்சியைக் கண்டதை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது.
திரு.எம்.கே.ஸ்டாலின்
முதலமைச்சர் – தமிழ்நாடு
Be the first to rate this book.