கலைஞர் என்னும் மனிதர் என்ற தலைப்பின் கீழ் கலைஞர் அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக நிறைந்துள்ளாரோ - அதே அளவிற்கு மணா என்னும் பத்திரிகையாளர் என்று தலைப்பு வைக்கும் அளவிற்கு நிறைந்திருப்பவர் மணா என்கிற லட்சுமணன். தமிழ் இதழியலின் நீண்ட பயணத்தில் - ஒரு பத்திரிகையாளராக - படைப்பாளராக - 40 ஆண்டுகள் பயணிப்பதென்பதும் யாவர்க்கும் தோழனாக இருப்பதென்பதும் பாராட்டப்படவேண்டிய ஒன்று. சிறு பத்திரிகைகளில் கவிதை - சிறுகதை என்று எழுத்துலகத்துக்குள் நுழைந்தவர் - காட்சி ஊடகம் மற்றும் ஆவணப்படங்களின் இயக்குநராகவும் தன்னைப் பதிவு செய்திருப்பவர். பல ஆளுமைகள் குறித்த நூல்களை எழுதியுள்ள மணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்காக - கலைஞர் என்னும் மனிதர் நூல் வழியாக மீண்டும் நம் கரங்களை பற்றிக் கொள்கிறார். நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது - பி.ராமமூர்த்தி விருது போன்ற முக்கிய விருதுகளைப் பெற்றவர் என்றாலும்கூட .. எல்லா அரசியல் தலைவர்களும் நம்பிக்கை கொண்ட ஒரு இதழியலாளர் என்ற நற்பெயரை சிறந்த விருதாகக் கருதுபவர். இவரின் நீண்ட எழுத்துப் பயணத்தின் அடையாளமாக நாற்பதாவது நூலாக இந்த நூலை வெளியிடுவதில் பரிதி பதிப்பகம் பெருமிதம் கொள்கிறது.
Be the first to rate this book.