தமிழ் இலக்கியத்தின் நவீனச் சிற்றிதழ் வெளி பல தசாப்தங்களைக் கொண்டது. காலங்களின் பின்னணியில் மேலும் கோட்பாட்டு இயங்கியல்ப் பார்வையில் இதுவரையிலான அத்தனை கலைப் பிரதிகளின் அகத்தையும் புறத்தையும் அதனளவில் 1930களில் இருந்து தொடர்ந்துவரும் நமது விமர்சன மரபு முரணாகவும் திறனாகவும் அறிவியல்ப்பூர்வமாகவும் இயலாக்கம் செய்து வந்திருப்பதை அறிந்திருக்கிறோம். கலையின் அழகியல் மற்றும் வரலாறு அரசியல் மனிதர்கள் மொழி பண்பு அதன் இயற்பியல் சூழல்கள் யாவற்றையும் மெய்யியல் படுத்தி மனம் உடல் என்பதன் நெடுங்கால பௌதீக இருப்பையும் ஆய்விற்கு உட்படுத்தி வந்த வகையில் இருத்தலியல் இறுகக்கட்டிக்காத்த நவீனத்துவ அழகியல் பாண்டங்கள் உடைந்து வருவதையும் அதன் வழி உண்டான ஹைப்பர் ரியாலிட்டியின் சேதன அசேதன சிதறல்கள் எந்த மையமும் அற்று தத்தம் தன்னிலைக்கு ஆன மீச்சிறு வித்தியாசங்களை மாற்றுகளாய் முன்வைத்து முன்னெப்போதுமில்லாத அரசியலாய் உலகப் பொதுவெளியில் எழுப்பிக்கொண்டிருக்கும் இக்காலத்தின் சலனங்களை பன்முக வாசிப்பிற்கென மதிப்புரையாகவோ விமர்சனமாகவோ பலரின் படைப்புகளின் மீதான பார்வைகளாகவும் தொகுத்து கவிஞர் யவனிகாஸ்ரீராம் இந்நூலை மற்றமைகளுக்கென ஆக்கித்தந்துள்ளார். அதன் முக்கியத்துவம் கருதி இப்பார்வை நூலை வெளியிடுவதில் வேரல் புக்ஸ் தன் இலக்கியப்பணியை தொடர்கிறது.
Be the first to rate this book.