தெளிவான, உயிர்ப்புள்ள இந்நூல், கலை பற்றிய சிந்தனைகளுக்குச் சிறப்பான அறிமுகத்தை வழங்குகிறது. பரிசோதனை முயற்சிகளும் பிரச்னைகளும் ஏன் அடிக்கடி முக்கியச் செய்திகளாகின்றன, கலை ஏன் முக்கியத்துவமுடையது என்பவற்றை சிந்தியா ஃபிரீலேண்ட் விளக்குகின்றார். அழகு, பண்பாடு, பணம், பாலுறவு மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றோடு கலைக்குள்ள உறவை விவாதித்து ரெம்ப்ராண்ட், கோயா, டேமியன் ஹஸ்ட் முதல், ஆணிகளாலேயே உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்கப் போலி வழிபாட்டுச் சிலைகள், (அமெரிக்க) இந்திய ப்யூப்லோ நடனம் மற்றும் எம்டிவி வரை யிலானவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்துகின்றார்.
Be the first to rate this book.