இருபது வருடங்களாக வெங்கட் சாமிநாதன் கருத்துலகில் தீவிரமாக இயங்கிவருகிறார். இக்காலங்களில் இவர் நம் அநேக முகங்களை - இலக்கியம், மரபு, புலமை, சிந்தனை, தத்துவம், சிற்பம், சங்கீதம், ஓவியம் ஆகிய அனைத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மேம்போக்கான மாறுதல்களுக்கு முன் வைத்த எளிய திருத்தல் யோசனைகள் அல்ல இவை. நம் வாழ்வின் அடித்தளம் பற்றிய நமது எண்ணங்கள் இவரால் புரட்டித் தள்ளப்பட்டிருக்கின்றன. எவற்றைச் செல்வங்கள் என மதித்து உலகில் எங்கும் காணக்கிடைக்காத ஒரு கலாச்சார வாழ்வின் அவகாசிகள் எனப் புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருந்தோமோ அவ்வெண்ணமே ஒரு போலிக் கனவென வாதங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்து தாட்சண்யமின்றித் தாக்கியவர் இவர்.
- சுந்தர ராமசாமி
வெங்கட் சாமிநாதன் பற்றி
Be the first to rate this book.