வாசு முருகவேல் இந்த நாவலில் தொட்டிருக்கும் களமும் வாழ்வும் இதுவரையிலான ஈழ இலக்கியத்தில் அதிகம் பேசப்படவில்லை. தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கிலிருந்து வேலைக்காகச் சென்று கொழும்பில் உதிரியாக வாழும் தமிழர்களின் வாழ்வை இது பேசுகிறது. வாசு முருகவேலின் மொழியில் கொழும்பைக் காணநேரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. போரியல் வாழ்விலிருந்து உதிரிகளாக அலைக்கழியும் பெருங்காற்று இந்த நாவல் முழுதும் விரவிக்கிடக்கிறது. ஈழ இலக்கியத்தில் புதிய வருகையாகத் தன்னை இந்த நாவலின் மூலம் நிலைநிறுத்தியிருக்கிறார் வாசு முருகவேல்.
- அகரமுதல்வன்
Be the first to rate this book.