“ஊரும் தேரும், குளமும் கோவிலும் இசையும் நாட்டியமும் மக்கள் வாழ்கையில ஒரு அங்கமாகிவிட்டது. அப்புறம் பாரம்பர்யத்தில் நாட்டமும் மாற்றங்களில் குறைவான ஈடுபாடும் இருப்பது இயற்கை தானே.. தேரோட்டத்தப்போ வழி நெடுக்க பஞ்சுமிட்டாய், கலர்சர்பத் வண்டி, தோளில் பலூன் தோரணங்களுடன் கையில் இருக்கும் புல்லாங்குழலில் சினிமா பாட்டு இசைப்பவன்... கொட்டாங்குச்சி பிடிலுடன் ராக ஆலாபனை செய்பவன், தேரோடும் வீதிகளில் நீர் மோர் பானக விநியோகம்,.... தேருடன் வலம் வரும் பொடிசுகள்,பக்தி வெள்ளத்தில் வடம் பிடிக்க வரும் சுற்றுவட்ட கிராம மக்களின், ஆரூரான், ஆரூரான் என்ற ஆனந்த கோஷம்..”
- நூலிலிருந்து..
Be the first to rate this book.