ஸ்பரிசம் புலன்களுள் ஆபத்தானது. தொடல் என்றாலே நம் மனது அஞ்சறது. இந்தக் கூச்சம்தான் நம் இந்தியப் பண்பாட்டின் உச்சமா? பவித்ரத்தை அப்படியென்றால் அது என்னவோ ஏதோ? எவ்வளவுதான் சீரழிஞ்சாலும் எஞ்சி யாருக்கும் எட்ட முடியாமல் எவரிடமும் ஒரு பவித்ரம் நிற்கிறது. அதைக் காப்பாற்றியே ஆகணும் என்று எவ்வளவோ ஆழத்தில் மனசடியில் புதைத்தாலும், புதைத்திருந்தாலும் ஒரு ஆட்சேபக் குரல் கதறுகிறது. இந்த அஞ்சலே இந்த ஆட்சேபணையே இருவரையும் காப்பாற்றுகிறது. அழணும் என்று இருந்தால் அழுது அடங்க வேண்டியதுதான். அடங்க முடியாவிட்டால் அழுதுகொண்டேயிருக்க வேண்டியதுதான். இது பார்த்தால் கண் துடைப்புக் கடங்கும் துக்கமாகத் தோணலே!
Be the first to rate this book.