தெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தை பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸ்த்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு.
நம் சமயத்துக்கேற்ப, நம் செளகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தை படித்துக்கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தி அனுமதி கிடைத்தி விட்டதாக எண்ணிக்கொண்டு, காரியத்தில் இறங்குகிறோம். காரியம் எதிர்பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால், தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாகத் திரும்பிவிட்டால், கல் சிரிக்கிறது என்கிறோம்.
ஆனால் சிரிப்பது தெய்வமுமில்லை; கல்லுமில்லை. எண்ணம்தான் சிரித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே பயத்துக்குரியது எண்ணம்தான். அதுவும் அவனவன் எண்ணமே.
Be the first to rate this book.