கடலடியிலிருந்து மீன்களோடு
கரைக்கு வந்து
வலையோடு வெளியே எறியப்பட்ட
சிப்பி நீ
தனக்கென்று தனிவிருப்பமில்லாத
உன் உடலில்
கடலின் நிணம் கறையாகச்
சிவந்திருக்கிறது
கடலின் காதல் சுவடுகளும்
உனது முதுகில் அழகிய சமச்சீர்
வரிகளாக
பறவை மூக்கென இறங்கிக்
குழிந்துள்ளன
கடலின் விருப்பத்திலிருந்தும் விலகி
இப்போது உலகின் விருப்பத்துக்கு
வீசப்பட்டு
இந்த வெயிலில்
உன்னை ஒப்புக்கொடுத்து
யாருக்காகவோ எதற்காகவோ
காத்திருக்கிறாய்
அதனால்
நீ புனிதச்சிப்பி
Be the first to rate this book.