தமிழ்ப் புலமையுலகில் நன்கறியப்பட்ட சு.தியடோர் பாஸ்கரனின் மற்றுமொரு ஆர்வக்களம் கலை வரலாறு. அதன் வெளிப்பாடே இந்நூல். 1973 தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட தொல்லியல் போன்ற பல துறைகளைச் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. தொல்பழங்காலத்து பாறைக்குடில்களிலிருந்து முதலாம் உலகப்போரில் சென்னை தாக்கப்பட்டது வரை ஆசிரியரின் பார்வை விரிகின்றது. ஆர்மா மலைக்குகை தொல்லெச்சங்கள், தஞ்சாவூர் கோவிலுள்ள புத்த சிற்பங்கள், இவை பற்றிய ஆய்வுரைகள் தமிழக வரலாற்றில் ஒரு புதிய பார்வையைத் தரூகின்றன.
தமிழில் நன்கு அறியப்படாத சில ஆளுமைகளை இந்நூல் அறிமுகம் செய்கின்றது. சிந்து சமவெளி பற்றி பர்ப்பொலாவின் நேர்காணலும், திராவிட உறவுமுறை பற்றி வரலாற்றாசிரியர் ட்ரவுட்மனின் பதிவும், தமிழக ஓவியங்கள் பற்றி ஜோப் தாமஸின் பங்களிப்பும் எடுத்துக்காட்டுகள். தமிழக வரலாறு பற்றிய நம் கண்ணோட்டத்தை இவை விரிவுபடுத்தும். இன்று நமது பாரம்பரிய கலைச் செல்வங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தொல்லியலிலும் கலை வரலாற்றிலும் ஒரு புதிய ஆர்வம் பரவி வரும் பின்புலத்தில் தான் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.