கால், கை வலிப்புதான் காக்காய் வலிப்பாகி இருக்கிறது. மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படுவதுதான் வலிப்பு என்று சொல்லப்பட்டாலும், பல வலிப்புகளுக்கு என்ன காரணம் என்றே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. அந்த வகையில்,
வலிப்பு ஏன் வருகிறது? வகைகள் என்னென்ன?
வலிப்பின் அறிகுறிகள் என்னென்ன?
வலிப்பு வராமல் தடுப்பது எப்படி?
வலிப்பு வந்தவர்களுக்கு என்னமாதிரியான முதலுவிகள் செய்ய வேண்டும்?
வலிப்பு என்ற ‘தடையை’ மீறி சாதித்தவர்கள் யார் யார்?
என்பது உள்ளிட்ட வலிப்பு குறித்து அனைத்து விஷயங்களையும் விளக்குகிறது இந்தப் புத்தகம். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு வரும் வலிப்புகளைப் பற்றியும் விரிவாகச் சொல்லும் இந்தப் புத்தகம், அவற்றுக்கான சிகிச்சை முறைகளையும், தீர்க்க முடியாத சில வலிப்புகளுடன் வாழ்வது எப்படி என்பதையும் சொல்கிறது. டாக்டர். ஏ.வி. ஸ்ரீனிவாசன், 1975-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றவர். 1993-ல் காமன்வெல்த் மெடிக்கல் ஃபெலோஷிப் மூலம் உடல் உறுப்பு இயக்கக் கோளாறுகள் குறித்த மேல் ஆய்வுக்காக லண்டன் சென்றவர். தமிழக அரசின் மருத்துவத் துறையில், ஃபெலோஷிப் ஆஃப் அமெரிக்கன் அகாதெமி ஆஃப் நியூராலஜி மற்றும் ஃபெலோஷிப் ஆஃப் இந்தியன் அகாதெமி ஆஃப் நியூராலஜி வாங்கிய முதல் நரம்பியல் நிபுணர் இவர்தான். நரம்பியல் மருத்துவத் துறையில் இவருடைய சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழத்தில் ‘எமிரிடஸ் புரஃபஸராக’ நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
Be the first to rate this book.