சிறுகதை என்று ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். படிப்படியாக வளர்ந்து நாவல் வடிவத்திற்கு வந்துவிட்டது. சில சமயங்களில் புனைவு என்னும் மாயப்புதிர் நம்மை மிக அந்தரங்கமான இடத்திற்கு அதுவாகவே இழுத்துச் சென்று நிறுத்தி விடுகிறது. அப்படித்தான் இந்த. "கைவிடப்பட்டவர்களின் கூடாரம்" நாவல் உருவானது. வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளில் ஜெயிக்கும் வாய்ப்பிருந்தும் பல்வேறு சூழ்ச்சிகளால் தோற்கடிக்கப்பட்ட நாற்பது வயதை நெருங்கிய மூவர் வாழவே வழியில்லாத நிலையில் சிதிலமடைந்த பழைய மேன்சன் ஒன்றில் சந்தித்து கொள்கிறார்கள். வாழ்வின் நம்பிக்கைக்கான சிறு கீற்று கூட தென்படாத நிலையில் வாழ முற்படுகிறார்கள். அந்த மனிதர்களின் நம்பிக்கைகள், அவ நம்பிக்கைகள், ஒழுக்க மீறல்கள், குற்ற உணர்வுகள், அனைத்தையும் தாண்டி மிச்சமிருக்கும் மனிதம் இப்படி எல்லாவற்றையும் அப்பட்டமாக எழுத முயன்று இருக்கிறேன். எனது எழுத்துக்களில் துயர சுவை அதிகம் கூடியது ''கைவிடப்பட்டவர்களின் கூடாரம்'' தான் என்பதை துணிந்து சொல்வேன்
Be the first to rate this book.