ஆவணக் காப்பகங்களில் தேடியெடுத்த ஆவணங்கள், முக்கியமான நபர்களின் உரைகள், அறிக்கைகள், அவ்வப்போது மாறிவரும் ஆட்சியாளர்களின் கொள்கைகள், சில தத்துவங்களின் வளர்ச்சிகள் ஆகியவற்றை மிகத்துல்லியமாகக் கணக்கிலெடுத்து, இந்திய-இஸ்ரேலிய புதுக் கூட்டணிக்கான காரணங்களை இந்நூலின் வழியாக வரலாற்றுப்பூர்வமாக ஆய்வு செய்திருக்கிறார் ஆசாத். உண்மையிலேயே பாலஸ்தீனத்தின் மீது இந்தியா அக்கறை கொண்டிருக்கிறதா இல்லையா என்கிற சமகாலத்துக் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்வதேற்ற தகவல்களைக்கூட அவர் நம் முன்னே வைக்கிறார். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவினால் இன்றைக்கு உலகில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களையும் அது சர்வதேச சமூகத்திற்கு எந்தளவுக்கு கேடுவிளைவித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் ஆதாரங்களைக் கொண்டு நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார் ஆசாத்.
Be the first to rate this book.