எங்கோ போய்விட்டு வருகையில் எனக்காக என் கோரம்பாயும், தலையணையும், ஒரு சுவரும் காத்திருக்கும்…அதன் விரிப்பில் பேசிச் சிரிக்க, சண்டை போட என யாருமே இருக்கமாட்டார்கள். என் விருதுகளும் படைப்புகளும் கூட அங்கே வரப் போவதில்லை. பேசுவதில்லை… திருநாள்கள், குடும்ப நிகழ்வுகள், பண்டிகைகளெல்லாம் ஒருபோதும் சுகப்படுத்தியிருக்கவில்லை. ஒரு வகையில் அவையெல்லாம் தொடர்பு இல்லாதது போலவே ஆகிவிட்டன. எனக்கு மட்டுமல்ல, குடும்ப அமைப்பு இல்லாத பலரின் வாழ்க்கையும் எங்கோ ஒற்றப்பட்டுதான் போய் நிற்கின்றன. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை வடிவம் செய்து எழுதிய நாவலே, ‘கய்த பூவு’.
– மலர்வதி
Be the first to rate this book.