உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை.
1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய, ஃபெலுடா வீரசாகசக் கதைகள் வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இந்தக் கதைகளின் நாயகன் ஃபெலுடா, வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என அழைக்கப்படுபவர்.
முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன.
ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்’ மூன்றாவது புத்தகம். வேட்டைக்காரர் கைலாஷ் சௌதுரிக்கு ஒரு கடிதம் வருகிறது! ‘நிலைமையை நீயே மோசமாக்கிக் கொள்ளாதே! உனக்கு சொந்தமில்லாததை நீ திருப்பித் தந்துவிட வேண்டும். விக்டோரியா நினைவகத்துக்குச் சென்று, அதன் தெற்கு வாயிலை நோக்கியவாறு இருக்கும் அல்லிச் செடிகளின் முதல் வரிசையில் முதல் செடியின் கீழ், அதை வைத்துவிட்டுச் சென்றுவிடு. போலீஸுக்குத் தகவல் சொல்லவோ, தனியார் துப்பறியும் நிபுணரை நாடவோ முயற்சிக்காதே! முயன்றால், உன் வேட்டையின்போது நீ கொன்ற மிருகங்களின் கதிதான் உனக்கும் ஏற்படும்!’ கடிதத்தின் உள்ளடக்கம் இதுதான். எழுதியது யார்? ஃபெலுடா துப்பறியத் தொடங்குகிறார். இந்தக் கடிதத்தின் முடிவு என்ன?
Be the first to rate this book.