நாம் ஒவ்வொருவருமே பொன், பொருள், புகழ், தத்துவம், விடை என்று ஏதோ ஒன்றைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வோட்டத்தையே வாழ்வென நம்பவும் செய்கிறோம். அவ்விதமாகவே இந்நாவலின் மையப் பாத்திரங்களும் தாங்கள் அவாவுற்ற ஒன்றின்பொருட்டு அல்லலுற்று அலைகிறார்கள்.
அத்தேடலின் கதை புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும் தொடங்கி, பிரான்ஸில் வளர்ந்து, செக் குடியரசில் முடிகிறது. தேடியலைந்ததைக் கண்டடைந்தார்களா? அதற்காக அவர்கள் கொடுத்த விலை எவ்வளவு? அடைந்த கணத்தில் அவ்வாசைகளின் மதிப்பென்ன? என்பதான கேள்விகளுடன், கதை முடியுமிடத்திலிருந்து ஒரு வாசகன் தனக்குள் தேடத் தொடங்கினால் அதுவே இந்நாவலின் வெற்றி.
Be the first to rate this book.