ஹிட்லர் வருவதற்கு முன்னால், 'உருமாற்றம்' என்ற நாவல் ஒரு ஜெர்மன் பல்கலைக்கழப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. கட்சித் தொண்டர்கள் அவளை (டோராவை) அழைத்து, “காஃப்கா மார்க்ஸிச எழுத்தாளரா?” என்று விசாரித்தார்கள். அவள் எதிர்மறையாக பதிலளித்தாள், அது மட்டுமன்றி, அவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில், ”காஃப்காவின் படைப்புகள் எந்த ஓர் அதிகாரத்திற்கும் - தந்தையின் அதிகாரம் முதல் மிக உயரிய சர்வாதிகார சக்தி வரையில் அடிபணிவதைக் கண்டிக்கின்றன” என்றும் சொன்னாள். அவர், அவர் காலத்து போர்களில் ஈடுபட்டாரா என்றும். மார்க்ஸ் வாசித்திருக்கிறாரா, போல்ஷிவிக் புரட்சியில் உண்மையான ஆர்வம் காட்டினாரா என்றும் கேட்கப்பட்டன. அதற்கும் அவள், 'இல்லை' என்றுதான் பதில் சொன்னாள். அப்போது முதல் பெர்லின் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறை அறை எண் 218லிருந்து முதலாளித்துவ எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃப்கா பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
* நூலிலிருந்து…
Be the first to rate this book.