காதல் என்பது கடவுள், பொழுதுபோகாமல் ஒரு ஆணையும், பெண்ணையும் வைத்து விளையாடும் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு.
சோஷியல் நெட்ஒர்க்கிங் காதல், மிஸ்டு கால் காதல், போன்றவை மட்டுமல்லாமல், கடந்த நூற்றாண்டின் பழக்கத்திலிருந்து, தடுக்கி விழுந்தபோது தாங்கிப் பிடித்த காதல், பஸ் ஸ்டாப்பில் பார்த்துக் கொண்டே பஸ்ஸை கோட்டைவிட்ட காதல் போன்றவையும் இன்னும் ஆங்காங்கே உள்ளது.
இப்புத்தகம் பிரபலமானவர்களின் காதல் குறித்த கட்டுரைகளைக் கொண்டது. நேரிடையாக பிரபலமானவர்களின் காதலைப் பற்றி மட்டும் கூறாமல் கட்டுரையின் முதல் பாதியில் நூலாசிரியரின் சகமனிதர்களின் உண்மையான காதல் அனுபவங்களையும் எழுதியுள்ளார்.
இந்தக் காதல் காற்று கல்கி வார இதழில் கடந்த 2011ஆம் ஆண்டு 12 வாரத் தொடராக வெளி வந்தது. அத்துடன் மேலும் மூன்று அத்தியாயங்களைச் சேர்த்து புத்தகமாக வெளி வந்துள்ளது.
Be the first to rate this book.