காதல் - மனித வாழ்வின் மையமான - ஆனால், மர்மமான ஓர் உணர்வு. அறிவியல் மற்றும் உளவியலின் கண்ணோட்டத்தில் காதல் குறித்த பல்வேறு கேள்விகளை ஆராயும் ஒரு வேறுபாடான புத்தகம், ‘காதல் அறிவியல்'. நரம்பியல், பரிணாம உயிரியல், உளவியல், மானிடவியல் உள்ளிட்ட பல துறைகளில் இருந்து தற்கால ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி, காதலின் பல கூறுகளை ஆழமாக அலசுகிறது இந்நூல்.
காதலில் ஈர்ப்பு ஏற்படுவதிலிருந்து, இணையரைத் தேர்ந்தெடுப்பது, நீண்டகால ஈடுபாடு, காதலைக் கட்டிக்காப்பதில் உள்ள தடைகள் என ஒவ்வொரு கட்டத்தையும் இந்நூல் ஆராய்கிறது. முக்கியமாக, பெண்ணியக் கண்ணோட்டத்தில் காதல் குறித்து ஆழமான பார்வையை வழங்குகிறது இந்நூல். சமூக நெறிமுறைகளும் பாலின பங்குகளும் (gender roles) காதல் மீதான எதிர்பார்ப்புகளையும் வெளிப்பாடுகளையும் எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை விவரிக்கிறது. புதுமையான பெண்ணிய அறிவியல் நூல்களில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னோடிப் படைப்பு இது. அதோடு, பல பண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட காதலின் ஆழமான உணர்வுபூர்வ முக்கியத்துவத்தையும் மறக்காமல் கவனிக்கிறது.
காதலிக்கும், காதலித்த, காதலிக்காத அனைவருக்கும் இது ஒரு சிறந்த வழிகாட்டி. காதலின் மர்மத்தன்மையில் வெளிச்சம் பாய்ச்சி, அறிவியல் மற்றும் உளவியலால் காதலைப் புரிந்து கொள்ள உதவும் ஓர் ஆக்கபூர்வமான புத்தகம்!
Be the first to rate this book.