கடவுளும் கைவிட்ட தேசம் பௌத்த சிங்கள ஆட்சி வெறியரின் அராஜக நிர்வாகத்தின் கீழ் இன்று சந்தித்து வரும் அவலங்களும் அவமானங்களும் கவிதைகளுள் வரலாற்று வரிகளாக நிலைக்கப் போவதையே இந்த கவிதைகள் உரக்க ஒலித்தது நிற்கின்றன. இந்த வரிகள் கொண்டிருக்கும் வார்த்தைகள் ஒன்றுமே வலிந்த கற்பனையில் அடுக்கப்பட்டவைகளே அல்ல என்பதை ஈழ மண்ணின் இரத்த வரலாற்றை உயிர்ப்புடன் உணர்ந்தவர்கள் அறிவர். இவை கவிஞரூடாக காலம் பௌத்த சிங்கள இனவாதிகள் மீது காறித் துப்பிய வெஞ்சினச் சொற்களேயாகும். இது கடவுளும் கைவிட்ட தேசத்தை பற்றிய கவிதைகள் என பெயரிடப்பட்டிருந்தாலும் கூட, மனிதம் மரணித்த மனிதர்களாலும் கைவிடப்பட்ட தேசத்தின் கவிதைகளாகவே எனக்குப் படுகிறது. அடக்கப்படும் மக்களின் கிளர்ச்சியும், எழுச்சியும், ஏன் வரலாற்றுப் புரட்சியும் கூட கவிஞர்களின் வெஞ்சின வரிகளாலேயே ஏற்றம் கண்டன என்பதே உண்மை! கவிஞர் ஜெனத்தின் கவிதைகளும் ஈழத்தமிழின விழிப்புக்கும், எழுச்சிக்கும், புரட்சிக்குமான வரலாற்று பாதையை உருவாக்கும் என நம்பலாம்.
- ராதேயன்
Be the first to rate this book.