விஞ்ஞானப்பூர்வமான பகுத்தறிவை வெகுமக்களிடையே பரப்புவது, உலகமும் உயிர்களும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதை விவரிக்கும் இயங்கியல் வரலாற்று பொருள்முதல்வாதத்தையும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டையும் மக்களுக்குப் புரியும் மொழியில் பேசுவது, இந்துமதம் என்கிற ஒன்று இல்லை, அது பலதையும் கலந்துகட்டிய கலவை என்கிற உண்மையை உரத்துச் சொல்வது, அப்படி சொல்வதனால் எவருடைய மனமாவது புண்படுமானால் உடனே மருந்து வாங்கிவர ஓடாமல் இருப்பது, வேதங்களோ பகவத் கீதையோ புனித நூல்களல்ல, சமஸ்கிருதம் தெய்வீக மொழியுமல்ல தேசிய மொழியுமல்ல என்பதை அம்பலப்படுத்துவது, மதவழிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு மாற்றாக மதச்சார்பற்ற மாற்றுக் கொண்டாட்டங்களை உருவாக்குவது, சாதிய பாலினப் பாகுபாடுகளுக்கும் இனத்துவேஷங்களுக்கும் எதிராக சமத்துவக் கருத்தியலை முன்வைப்பது, பெரும்பான்மையினரின் அச்சுறுத்தலிலிருந்து சிறுபான்மையினரை பாதுகாப்பது- சுயாதீனமான வாழ்வுக்கான அவர்களது போராட்டத்தில் உடன் நிற்பது, சங் பரிவாரத்தின் ஆட்சி எவரின் நலனுக்கானது என்பதை அம்பலப்படுத்துவது, காவி பயங்கரவாதத்திற்கும் கார்ப்பரேட் பயங்கரவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை சமரசமின்றி முன்னெடுப்பது என்று நம்முன்னே கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன, கடுகளவேனும் செய்துகொண்டிருக்கிறோமா என்பதை யோசிப்பது தோழர். அசோகனுக்கு செலுத்துகிற பொருத்தமான அஞ்சலியாக இருக்கக்கூடும். ஒருவேளை அத்தகைய யோசிப்பு அவசியமற்றது என்று திருப்தியுறுவோமானால் அது இந்த நாட்டின் சுதந்திரத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் இணங்கிவாழும் சகிப்புத்தன்மைக்கும் எதிர்காலத்தில் சமைக்க விரும்பும் சமத்துவத்திற்கும் மனித மாண்புகளுக்கும் செலுத்தக்கூடிய அஞ்சலியாகவும் மாறக்கூடும்.
Be the first to rate this book.