பாலகுமார் விஜயராமனின் எழுத்தில் ஒரு தேடல் இருக்கும். அத்தேடல் பாசாங்கற்ற மொழியில் சிற்றோடையாய் ஒழுகியபடி நகர்ந்துகொண்டிருக்கும். ஒரு நேயத்துடன் அது கைகோர்த்துக்கொள்ளும். தேடலில் அவர் கைக்கொண்ட முறைமையே நுட்பமானதாக இருக்கிறது. ஹங்கேரி, இத்தாலி, தென்னாப்பிரிக்காவின் மொஸாம்பிக், ஜப்பான், எகிப்து என்று வரைபடத்தின் நரம்புக்கோடுகளின் மீது ஊர்ந்து அலைந்திருக்கிறார். ஊர்தலில் பல்வேறு வகைமையானச் சித்திரங்களை அவர் கண்டிருக்கிறார். அதுவே 'கடவுளின் பறவைகள்' எனும் இந்நூலை சிறகடித்துப் பறக்கச் செய்கிறது.
- எழுத்தாளர் எஸ். அர்ஷியா
வேறு யுகங்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் சென்று புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ள உதவுகின்றன, பறவை வளர்ப்பு. அதன் நீட்சியாக, வளர்ப்பு விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான புனைவுகளை வாசிக்கும் ஆர்வம் அதிகரித்தது. அடுத்தடுத்த கண்ணியாய் பறவைகள், விலங்குகள், சூழலியல் சார்ந்த உலகக் கதைகள் என்று தேடல் தொடர்ந்தது. வாசித்து மனதில் தங்கிய கதைகளை, தமிழில் மொழியாக்கம் செய்வது பிடித்த பொழுதுபோக்காகி, இன்று அது ஒரு தொகுப்பாக வளர்ந்திருக்கிறது.
- பாலகுமார் விஜயராமன்
Be the first to rate this book.