யுத்தம் ஒன்றே வாழ்க்கையென்றான பின் மரணம் ஒன்று மட்டுமே நிச்சயமானதாகி விடுகிறது. ஏனெனில் உயிர்களால் ஆடப்படும் பகடையாட்டமது. விதிகளும், நியாயங்களுமற்று ஆடப்படும் அந்த ஆட்டத்தில் தப்பித்தவர்கள் காலம் தோறும் தங்கள் கதைகளை வரலாற்றில் எழுதி வைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
யுத்தத்தை மட்டுமே கடந்த முப்பது வருட வாழ்க்கையாக கொண்ட ஈழத்தமிழர்களின் இலக்கியக்குரல்களில் ஒன்று கருணைரவியினது. வாழப்படாத வாழ்க்கை பற்றிய, வாழ்வுடன் மரணமாடிய குரூர விளையாட்டுப்பற்றிய, கைவிட்டுப் போன கனவுகள் பற்றிய நினைவுகள் இந்தக்கதைகள். குருதியினாலும் கண்ணீராலும் ஊறியிருக்கும் தனது கடந்த காலத்தின் பாதையில் இந்த கதைகளின் வழி நம்மையும் அழைத்துச் செல்கிறார்.
யாழ்ப்பாணத்தில் உப்பேறிய கிராமமொன்றில் பிறந்த இவரது கதைகளெங்கும் வெம்மையும், உப்பின் வீச்சமும், நேராகவும் கிடையாகவும் எல்லலைகளற்று விரிந்து கிடக்கும் வீதிகளின் கானல்வீச்சமும் நமது முகத்திலறைந்தபடியேயிருக்கின்றன.
Be the first to rate this book.