அருமையான கேரளா பயணக்கட்டுரை குறிப்புகள் அடங்கிய புத்தகம். வரலாற்றை திருத்தி மக்களை திசை திருப்பி கலவரத்தில் குளிர் காயும் காலம் மற்றும் அரசு நடந்து கொண்டிருக்கும் நேரம். இப்படியான நெருக்கடி காலங்களில் உண்மையான வரலாற்றை சொல்லும் கலைஞன் எப்பவும் போற்றுதலுக்கு உரியவனாக வாழ்த்தை பெறுவான். அப்படியான எழுத்து கலைஞன் என் தம்பி ராம் தங்கம்.
இது வெறும் பயணக்குறிப்புகள் மட்டுமல்ல ஒரு எழுத்தாளனின் கடும் உழைப்பு இதில் பண்படுகிறது. கடவுளின் தேசம் கேரளாவின் திருவனந்தபுரம் ஆரம்பித்து போர்ட் கொச்சி வரை எழுத்து படைப்பாளிகளை சந்திப்பது போல் பயணம் இருந்தாலும் அந்தந்த நிலங்களின் உண்மை வரலாறு தேடல், உழைப்பு ராம் தங்கத்தின் பெறும் வெற்றியாக எனக்கு படுகிறது. இப்புத்தகம் கல்வி நிலையங்களுக்கு தேவையானதாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
- சாத்தூர் தியாகராஜன்
Be the first to rate this book.