குறும்படம் என்பது மிகவும் திட்டமிட்ட அழகைக் கோருவது. நான் காட்டு வெள்ளமாகப் பாய்வேன் என்கிற வைராக்கியத்தை விடவும், அதை வாய்க்காலில் கொண்டு போகிற திராணிக்குதான் முதல் இடம். அதற்கு முதல் அடி எடுத்துக் கொடுப்பது எழுத்து மட்டுமே. அந்த எளிய போக்கில் நம்மால் பெரிய வெள்ளத்தை கற்பனை பண்ணுவதற்கு அதில் சந்தர்ப்பம் தென்பட்டு விடுமெனில் அதனுள்ளே கலை பணிந்திருக்கிறது. இது எனது ஐடியா. அப்படித்தான் நான் எழுதத் துணிந்திருக்கிறேன். சற்றே மாறுபட்டாலும் ஏறக்குறைய சினிமாவும் அப்படித்தான்.
Be the first to rate this book.