சித்ரூபனின் கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல. இவரது சொற்சித்திரத்தில் ஒலிகளையும் கேட்க முடியும். எனக்குக் கேட்டது. ஆனால் அதைக் கேட்க உங்கள் காதுகள் கூர்மையாக இருக்க வேண்டும்.
சித்ரூபனின் கதை மாந்தர்கள் எளிய மனிதர்கள். அவர்களில் அதிகாரம் வாய்க்கப் பெற்றவர்கள் வன்மம் கொண்டவர்களாகத் திரிந்து போகிறார்கள். அவர்கள் அப்படித் திரிந்து போனதற்கான காரணங்களைச் சித்ரூபன் ஆராய்வதில்லை. அது அவர் நோக்கமும் இல்லை. அவர்கள் கையில் அதிகாரமற்ற எளியவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களைச் சொல்லவே - அதாவது படம் பிடிக்கவே - அவர் முனைகிறார், அதில் பெருமளவு வெற்றியும் பெறுகிறார்.
சித்ரூபனின் கதைகள் நல்ல வாசிப்பனுபவம் தருபவை. ஆனால் அதையும் தாண்டி அவை வேறு பலவற்றையும் உணர்த்துகின்றன. அதனால் இன்றையக் கதைவெளியில் அவை அவசியமானவையாகின்றன.
- மாலன்
Be the first to rate this book.