ஹிந்து மத நூல்களில் கடவுளுக்கு ஓராயிரம் பெயர்கள் இருக்கின்றன. அந்தப் பெயர்களைத் திருப்தித் திருப்பிக் கூறும்படி சிறு வயதில் எனக்குக் கற்பித்தார்கள். கடவுளின் இந்த ஓராயிரம் பெயர்கள் முடிவானவை அல்ல. அவருக்கு இன்னும் எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன. உலகில் எத்தனை ஜீவஜந்துக்கள் இருக்கின்றனவோ, அத்தனை பெயர்கள் கடவுளுக்கு இருக்கின்றன. அதனால்தான், கடவுளைப் பெயரில்லாதவர் என்றும் கூறுகிறோம்; கடவுளுக்குப் பல உருவங்கள் இருப்பதால் அவர் உருவம் அற்றவர் என்றும் கருதுகிறோம்; அவர் பல மொழிகளில் நம்முடன் பேசுவதால், அவர் பேச்சில்லாத மெளனி என்றும், இப்படியே அவரைப் பல விதமாகவும் கருதுகிறோம்.
Be the first to rate this book.